Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவில் 47 பேருக்குக் கிருமித்தொற்று - 2 மாதங்களில் இல்லாத உயர்வு

 சீனாவில் 47 பேருக்குக் கிருமித்தொற்று - 2 மாதங்களில் இல்லாத உயர்வு 

வாசிப்புநேரம் -
சீனாவில் 47 பேருக்குக் கிருமித்தொற்று - 2 மாதங்களில் இல்லாத உயர்வு

(கோப்புப் படம்: REUTERS/Carlos Garcia Rawlins)

சீனத் தலைநிலத்தில், 2 மாதங்களில் இல்லாத வகையில் 47 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களில் இல்லாத அளவில் அங்கு கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களின் அன்றாட எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 23 பேர் வடமேற்கு மாநிலமான
சின்ஜியாங்கைச் சேர்ந்தவர்கள்.

அங்கு காஷ்கர் பகுதியில் அறிகுறிகள் இன்றிப் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சிய 24 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்.

இதற்கு முன்னதாக, ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று, 49 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது.

அறிகுறிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16ஆகக் குறைந்தது.

நேற்று முன்தினம் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38ஆக இருந்தது.

சீனாவில் பாதிக்கப்பட்டடோரின் மொத்த எண்ணிக்கை 86,000-ஐத் நெருங்கிக்கொண்டிருக்கிறது.

மாண்டோர் எண்ணிக்கை, மாற்றமின்றி 4,634ஆக உள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்