Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவில் 5 மாதங்களுக்குப் பிறகு அதிகரித்துள்ள நோய்த்தொற்றுச் சம்பவங்கள்

சீனாவில் 5 மாதங்களுக்குப் பிறகு அதிகரித்துள்ள நோய்த்தொற்றுச் சம்பவங்கள்

வாசிப்புநேரம் -

சீனாவில் சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு COVID-19 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இன்று மட்டும் சீனாவில் புதிதாக 115 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.

ஜூலை 30-ஆம் தேதிக்குப் பிறகு இவ்வளவு அதிகமான நோய்த்தொற்றுச் சம்பவங்கள் இன்றுதான் பதிவாகியிருக்கின்றன.

சீனாவில் இரண்டாம் கட்ட நோய்ப்பரவல் வந்துவிடக் கூடாது என்பதில் அது கவனமாக உள்ளது.

தற்போது 3 நகரங்கள் முடக்கப்பட்டுள்ளன, கிருமித்தொற்றுப் பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இன்று பதிவான நோய்த்தொற்றுச் சம்பவங்களில் பெரும்பாலானவை தலைநகர் பெய்ச்சிங்கில் அடையாளம் காணப்பட்டவை.

சீனாவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 87,706.
மாண்டோர் எண்ணிக்கை 4,634-ஆக உள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்