Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கிருமிப்பரவலை முறியடிக்க மீண்டும் போராடத் தொடங்கியிருக்கும் சீனா

கிருமிப்பரவலை முறியடிக்க மீண்டும் போராடத் தொடங்கியிருக்கும் சீனா

வாசிப்புநேரம் -
கிருமிப்பரவலை முறியடிக்க மீண்டும் போராடத் தொடங்கியிருக்கும் சீனா

(படம்: REUTERS)

சீனா ஏப்ரலுக்குப் பிறகு மீண்டும் கிருமிப்பரவலை முறியடிக்கக் கடுமையாகப் போராடி வருகிறது.

அண்மை வாரங்களில் ஆக அதிகமாக, அங்கு புதிதாக 101 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர்களில் மூவர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்.

உள்நாட்டில் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களில் பெரும்பாலோர் மேற்கிலுள்ள சின்ஜியாங் (Xinjiang)வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

வடகிழக்கிலும் கிருமித்தொற்று இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

டாலியான் கடலோர நகரில் உருவாகியிருக்கும் குழுமம், தென்கிழக்குக் கடற்கரை வட்டாரமான ஃபூஜியான் (Fujian) வரை பரவியுள்ளது.

டாலியானில், நான்கு நாள்களுக்குள் ஆறு மில்லியன் பேருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்போவதாக உள்ளூர் அதிகாரிகள் கூறினர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்