Images
  • China Collision
    (படம்: AFP)

சீனாவில் 100க்கும் அதிகமான கார்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்து

சீனாவின் குவிசௌவ்(Guizhou) மாநிலத்தில் நூற்றுக்கும் அதிகமான கார்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் குறைந்தது 2 பேர் மாண்டனர்.

50க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

அவர்களில் 10 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

உள்ளூர் நேரப்படி இரவு 8 மணியளவில் விரைவுச்சாலைகளில் விபத்து ஏற்பட்டது.

நூற்றுக்கணக்கான கார்களும் குறைந்தது ஒரு பேருந்தும் ஒன்றன்மீது ஒன்று மோதிக்கொண்டதைச் சம்பவ இடத்தில் பதிவான காணொளி காட்டுகிறது.

மழையாலும் பனியாலும் சாலைகளில் கார்கள் சறுக்கி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

அந்தக் கடுமையான விபத்து குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.

விரைவுச்சாலைகளில் போக்குவரத்து வழக்கநிலைக்குத் திரும்பியிருக்கிறது.

சாலைகளில் பனி இருப்பது பற்றிய எச்சரிக்கை நிலை உயர்த்தப்பட்டிருக்கிறது.

Top