Images
  • china covid (2)
    (படம்: Reuters/China Daily)

சீனாவில் புதிதாகப் 13 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி

சீனாவில் புதிதாகப் 13 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் வெளிநாடுகளிலிருந்து சீனா சென்றவர்கள் என்று அந்நாட்டு தேசியச் சுகாதார ஆணையம் தெரிவித்தது.

தொடர்ந்து 2 நாள்களாகப் புதிதாக நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13ஆகப் பதிவானதாக ஆணையத்தின் அறிக்கை குறிப்பிட்டது.

இந்நிலையில், நோய்க்கான அறிகுறி ஏதுமின்றி 34 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.

நேற்றைய நிலவரப்படி, சீனத் தலைநிலத்தில் கிருமித்தொற்று உறுதியானோர் மொத்த எண்ணிக்கை 85,672. அவர்களில் 4,634 பேர் மாண்டுவிட்டனர். 

Top