Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவில் புதிதாய் 76 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று

சீனாவில் புதிதாய் 76 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அதன் தேசியச் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

சீனாவில் புதிதாய் 76 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அதன் தேசியச் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 40 பேர் உள்ளூரில் பாதிக்கப்பட்டதாக ஆணையம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

கிழக்கு மாநிலமான சியாங்சூவில் (Jiangsu) 39 பேரும், வடகிழக்கு மாநிலமான லியாவ்னிங்கில் (Liaoning) ஒருவரும் பாதிக்கப்பட்டனர்.

அறிகுறிகள் இல்லாமல் 24 பேர் பாதிக்கப்பட்டனர்.
அத்தகையோரை, கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டோரின் பட்டியலில் சீனா சேர்த்துக் கொள்வதில்லை.

சீனாவில் இதுவரை மொத்தம் 92,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாண்டோர் எண்ணிக்கை 4,636. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்