Images
  • china covid (2)
    (கோப்புப் படம்: AFP/Greg Baker)

சீனாவில் புதிதாக 24 பேருக்குக் கிருமித்தொற்று

சீனாவில் இன்று புதிதாக 24 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டதாக அதன் தேசியச் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

நேற்று 22 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது. இன்றைய எண்ணிக்கை அதைவிட அதிகம் என ஆணையம் குறிப்பிட்டது.

கிருமித்தொற்றுப் பதிவான 24 பேரில் இருவருக்கு மட்டுமே உள்ளூர் அளவில் கிருமி தொற்றியுள்ளதாகவும் ஆணையம் தகவல் அளித்தது.

இதுவரை சீனாவில் மொத்தம் 98,570 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. மாண்டோர் எண்ணிக்கை 4,636 ஆக உள்ளது.


 

Top