Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென் சீனாவில் கிருமிப்பரவல்... பள்ளிகள் மூடல்... மில்லியன் கணக்கானோருக்குப் பரிசோதனை

தென்சீனாவில் உள்ள சில நகரங்களில் இருக்கும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 

வாசிப்புநேரம் -

தென்சீனாவில் உள்ள சில நகரங்களில் இருக்கும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

அந்த நகரங்களில் உள்ள மில்லியன் கணக்கானோருக்குக் கொரோனா கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அங்குத் தடுப்பூசி போடாத பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவது பற்றிக் கவலை ஏழுந்துள்ளது.

புத்தியான் (Putian) நகரில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

சிங்கப்பூரிலிருந்து அங்கு சென்ற ஒருவருக்கு டெல்ட்டா வகைக் கிருமி தொற்றியதால் 100க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு, அந்த ஆடவரிடம் கிருமித்தொற்று அறிகுறிகள் தென்பட்டன.

அவருடைய 12 வயது மகனும், வகுப்புத் தோழனும் சென்ற வாரம் அடையாளம் காணப்பட்ட நோய்த்தொற்றுக் குழுமத்தில் முதன்முதலில் பாதிக்கப்பட்டவர்கள்.

பிறகு, மேலும் 36 பிள்ளைகளுக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு வரத் திட்டமிடுவோர், எச்சரிக்கையாய் இருக்குமாறு இங்குள்ள சீனத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

பயணத்தை முடித்து நாடு திரும்புவதற்கு மன ரீதியாகவும், பண ரீதியாகவும் தயாராய் இருக்குமாறும் கூறப்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்