Images
COVID-19: சீனாவில் 8 மாதங்களில் முதன்முறையாக ஒருவர் மரணம்
சீனாவில், எட்டு மாதங்களில் முதன்முறையாக ஒருவர், கொரோனா கிருமித்தொற்றால் மாண்டார்.
அவர், ஹெபெய்(Hebei) மாநிலத்தைச் சேர்ந்தவர்.
அந்த மாநிலத்தின் பல நகரங்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளன.
சீனாவில், இன்று புதிதாக 138 பேரிடம் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.
அவர்களில் 124 பேர், உள்ளூரில் கிருமித்தொற்றுக்கு ஆளாயினர்.
பாதிக்கப்பட்டவர்களில் 81 பேர், ஹெபெய் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
43 பேர், வடக்கிழக்கு மாநிலமான ஹெய்லொங்ஜியாங்கைச் (Heilongjiang) சேர்ந்தவர்கள்.
சீனாவில் அறிகுறிகளின்றி 78 பேர் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.