Images
சீனாவில் மேலும் 55 பேருக்குக் கிருமித்தொற்று
சீனாவில் புதிதாக 55 பேரிடம் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சமூக அளவில் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 பேர் ஹெபெய்(Hebei) மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
தலைநகர் பெய்ச்சிங்கிலும் வடகிழக்கில் உள்ள ஹெய்லொங்ஜியாங் (Heilongjiang) மாநிலத்திலும் சமூக அளவில் முறையே ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.
11 மில்லியன் பேர் வசிக்கும் ஹெபெய் மாநிலத்தின் ஷிஜியாஸுவாங் (Shijiazhuang) நகர் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கு தற்போது முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவில் அறிகுறி ஏதுமில்லாத மேலும் 81 பேருக்கும் நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.