Images
  • covid (1)
    (படம்: AFP/NOEL CELIS)

COVID-19 கிருமித்தொற்று: சீனாவில் மாண்டோர் எண்ணிக்கை 1,500ஐத் தாண்டியது

சீனாவின் ஹுபெய் மாநிலத்தில் மேலும் 139 பேர் COVID-19 கிருமித்தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.

கூடுதலாக, 2,400 பேருக்குக் கிருமி தொற்றியுள்ளது.

அதையடுத்து, சீனாவில் ஒட்டுமொத்தாக மாண்டோர் எண்ணிக்கை 1,500ஐக் கடந்துவிட்டது.

கிருமித்தொற்றால் 66,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வேளையில், COVID 19 கிருமிப் பரவல் சீனாவுக்கு ஒரு பெருஞ்சவாலாக இருந்து வருகிறது என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வாங் யீ (Wang Yi) கூறியுள்ளார்.

இருப்பினும், நிலைமை இன்னும் கட்டுக்குள்தான் இருக்கிறது என்றார் அவர்.

கிருமித்தொற்றுக் குறித்து சீனா வெளிப்படையாக இல்லை என்ற குற்றச்சாட்டைத் திரு. வாங் மறுத்துப் பேசினார்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, சீனா, முழுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகிறது என்றார் அவர்.

பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டபோதும் சீனாவால் அதை செய்ய முடிந்தது என திரு. வாங் குறிப்பிட்டார். 

Top