Images
  • china flood
    (படம்: Reuters)

சீனா: வெள்ளத்தில் மாண்டோர் எண்ணிக்கை 61க்கு அதிகரிப்பு

சீனாவின் தெற்கு, மத்திய வட்டாரங்களில் தொடர்ந்து பெய்யும் கனத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 61 பேர் மாண்டனர்.

சுமார் 356,000 பேர் தங்கள் வீட்டிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அந்நாட்டு அவசர நிலை நிர்வாக அமைச்சு வெளியிட்ட அறிக்கையின்படி 9,300 வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும் 3.71 மில்லியன் ஹெக்டர் விவசாய நிலம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் சீனப் பொருளாதாரம் 13.35 பில்லியன் யுவான் (1.93 பில்லியன் வெள்ளி) இழப்பை எதிர்நோக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

சீனாவின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள குவாங்டோங் (Guangdong) வட்டாரத்திலிருந்து தென்மேற்கில் சொங்சிங் (Chongqing) வட்டாரத்திலுள்ள யாங்சு (Yangtze) ஆறு வரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

4,300க்கும் மேலானோர் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.  

Top