Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வெளிநாட்டுத் தடைகளிலிருந்து சீன நிறுவனங்களைப் பாதுகாக்கும் புதிய தடையெதிர்ப்புச் சட்டம்

சட்டம் குறித்த மேல்விவரங்கள் வெளியிடப்படவில்லை.

வாசிப்புநேரம் -
வெளிநாட்டுத் தடைகளிலிருந்து சீன நிறுவனங்களைப் பாதுகாக்கும் புதிய தடையெதிர்ப்புச் சட்டம்

படம்: REUTERS/Aly Song

வெளிநாட்டில் விதிக்கப்படும் தடைகளிடமிருந்து சீன நிறுவனங்களைப் பாதுகாக்கும் புதிய தடை-எதிர்ப்புச் சட்டத்தைப் பெய்ச்சிங் முன்மொழிந்துள்ளது.

அதற்கான மசோதா நேற்றுத் தாக்கல் செய்யப்பட்டது.

வியாழக்கிழமைக்குள் அதற்கு ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டம் குறித்த மேல்விவரங்கள் வெளியிடப்படவில்லை.

பல சர்ச்சைக்குரிய விவகாரங்களின் தொடர்பில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சீனாவுக்கு அதிக நெருக்குதலைக் கொடுத்துவருகின்றன.

ஹாங்காங்கின் சுதந்திரம், சின்சியாங் (Xinjiang) மாநிலத்தில் உள்ள வீகர் முஸ்லிம் துன்புறுத்தல்கள் ஆகியவை அவற்றுள் அடங்கும்.

அமெரிக்க முதலீட்டாளர்கள் இன்னும் கூடுதலான சீன நிறுவனங்களை அணுகமுடியாதபடி, கடந்த வாரம் அதிபர் ஜோ பைடன் (Joe Biden) நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டிருந்தார்.

-AFP
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்