Images
  • britain china uk
    (படம்: AFP)

சீனா: போதைப்பொருள் சோதனையில் பிரிட்டனைச் சேர்ந்த நால்வர் உட்பட19 பேர் கைது

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

சீனாவின் ஸூசோ (Xuzhou) நகரில், 16 வெளிநாட்டினர் உட்பட 19 பேர் போதைப்பொருள் தொடர்பான சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரிட்டனைச் சேர்ந்த நால்வர் கைதானவர்களில் அடங்குவர்.

மற்றவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் போன்ற விவரங்கள் தெளிவாக தெரியவில்லை.

விசாரணைத் தொடர்வதாகச் சொல்லப்பட்டது.

சீனாவில் போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீண்ட கால சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், மேலும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்குகளில் மரண தண்டனையும் விதிக்கப்படலாம்.  

Top