Images
  • china apec
    (படம்: AFP/Nazri RAPAAI)

அனைத்துலகத் தடையற்ற வர்த்தகத்திற்குச் சீனா ஒரு முக்கிய மையம்: அதிபர் சி சின்பிங்

சீன அதிபர் சி சின்பிங் (Xi Jinping), அனைத்துலகத் தடையற்ற வர்த்தகத்திற்குச் சீனா ஒரு முக்கிய மையம் என்று கூறியுள்ளார்.

APEC உச்சநிலைச் சந்திப்பில் உரையாற்றிய அவர், மாபெரும் அளவைக் கொண்ட சீனப் பொருளியல் தொடர்ந்து திறந்திருக்கும் என்று வலியுறுத்தினார்.

வர்த்தகத்தில் தன்னைப்பேணித்தனத்திற்கு எதிராக அவர் எச்சரித்தார்.

மேலும், சீனாவின் பொருளியல் சீர்திருத்தத்திற்கு வளர்ச்சிக் கட்டமைப்பை உருமாற்றுவது முக்கியம் என்று திரு. சி தெரிவித்தார்.

சீனா, புத்தாக்கத்தைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதுடன் உற்பத்தித்திறனைப் பெருக்க மேலும் முயற்சி எடுக்க வேண்டும் என்றார் அவர்.

உலகளாவிய தேவைகளைப் பூர்த்தி செய்ய சீனா அதன் விநியோகத்தை அதிகரிக்கும் என்றும் திரு. சி குறிப்பிட்டார்.

பொருளியலை மீண்டும் திறக்க சீனா உறுதியான கடப்பாடு கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

Top