Images
  • xiaomi phone
    (படம்: REUTERS/Rafael Marchante)

சீனா : கைத்தொலைபேசிக்கான விண்ணப்பங்களுக்கு முக அடையாளங்களைப் பதிவுசெய்ய வேண்டும்

சீனாவில், இனி கைத்தொலைபேசிக்கான சேவைகளுக்கு விண்ணப்பம் செய்வோர் தங்கள் முக அடையாளங்களைப் பதிவுசெய்துகொள்ள வேண்டும்.

புதிய நடைமுறை குறித்து கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. அது இன்று நடப்புக்கு வந்துள்ளது.

இதற்கு முன்பு, கைத்தொலைபேசிக்கான சேவைகளுக்கு விண்ணப்பம் செய்வோர் தங்கள் தேசிய அடையாள அட்டையைச் சமர்ப்பித்து, தங்கள் புகைப்படத்தை அங்குப் பதிவுசெய்ய வேண்டியிருந்தது.

பெரும்பாலான நாடுகளில் அதுவே நடைமுறை.

இனி, தேசிய அடையாள அட்டையில் இருக்கும் விவரங்களை உறுதிசெய்ய, அங்க அடையாளமும் பதிவுசெய்யப்படும் எனச் சீனா தெரிவித்துள்ளது.

Top