Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவில் 1,000 ஆண்டுகள் காணாத வெள்ளம்- தத்தளிக்கும் மக்கள்

சீனாவின் ஹேனான் (Henan) மாநிலத்தில் பெய்துவரும் கனத்த மழையால், குறைந்தது 25 பேர் மாண்டனர்.

வாசிப்புநேரம் -
சீனாவில் 1,000 ஆண்டுகள் காணாத வெள்ளம்- தத்தளிக்கும் மக்கள்

படம்: AP

சீனாவின் ஹேனான் (Henan) மாநிலத்தில் பெய்துவரும் கனத்த மழையால், குறைந்தது 25 பேர் மாண்டனர்.

மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது.

பல மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஓராண்டு பெய்யக்கூடிய அளவு மழை, மூன்றே நாள்களில் அங்கு பெய்திருக்கிறது.

இத்தகைய மழை 1,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பெய்வதாக ஹேனான் தலைநகர் ஷெங்ஸோவ் (Zhengzhou) நகர வானிலை நிலையம் தெரிவித்தது.

அங்கு வெள்ளத்தால் நிலத்தடி ரயில் நிலையத்தில் சிக்கிக்கொண்டவர்களும் மாண்டவர்களில் அடங்குவர்.

ரயிலில் பயணிகள் கழுத்தளவு தண்ணீரில் தத்தளிக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

ரயில் வண்டியின் கூரையை வெட்டி எடுத்து, மீட்புப் பணியாளர்கள் பயணிகளைப் பாதுகாப்பாக வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது.

அடுத்த 3 நாள்கள், வட்டாரத்தில் கடுமையான மழை பெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

சுமார் 5,700 மீட்புப் பணியாளர்கள் வெள்ள இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்