Images
  • china (5)
    படம்: AFP

சீனாவில் வெள்ளத்தால் மாண்டோர் எண்ணிக்கை 51-க்கு அதிகரித்தது

சீனாவின் ஹெனான் வட்டாரத்தில் வெள்ளத்தால் மாண்டோர் எண்ணிக்கை
51க்கு உயர்ந்துள்ளது.

தேடல், மீட்புப் பணிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.

அந்தப் பகுதியில் In-Fa சூறாவளி வீசவிருப்பதால் வட்டாரத்தின் வடக்கு, மேற்குப் பகுதிகளில் கனத்த மழைபெய்யும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பைக் கருதி 40,000-கும் அதிகமானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் 10 பில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர்.  

Top