Images
  • china flood october
    படம்: AFP

சீனாவில் 1.8 மில்லியன் பேரைப் பாதித்துள்ள வெள்ளம்

சீனாவின் ஷான்சி (Shanxi) மாநிலத்தில், கடுமையான மழை, வெள்ளம் காரணமாக சுமார் 1.8 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மஞ்சள் நதியின் ஒரு பகுதியில் அணை உடைவதைப் பாதுகாக்க மீட்புப் பணியாளர்கள் போராடி வருகின்றனர்.

ஒரு வாரத்திற்கு முன் தொடங்கிய பருவமழையால் இதுவரை 120,000 குடியிருப்பாளர்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

சுமார் 200,000 ஹெக்டர் விளைநிலம் பாழாகிப் போனது. 17,000 வீடுகளும் நாசமாயின.

நிலச்சரிவில் குறைந்தது நான்கு போக்குவரத்துப் பாதுகாவலர்கள் மாண்டனர்.

நிவாரணப் பொருள்களும் நிதியுதவியும் குவியும் வேளையில் மீட்புப் பணிகளைப் பேரிடர் மீட்புக் குழுக்கள் முடுக்கிவிட்டுள்ளன.  

Top