Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

உளவு நடவடிக்கைகளுக்கு எதிரான சீனாவின் இணையத்தளம்

சீனா, இணையத் தளத்தின் உதவியுடன் வெளிநாட்டு உளவு நடவடிக்கைகளுக்கு எதிரான இயக்கத்தை முடுக்கிவிட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
உளவு நடவடிக்கைகளுக்கு எதிரான சீனாவின் இணையத்தளம்

கோப்புப் படம்: Reuters/Kacper Pempel/Illustration

சீனா, இணையத் தளத்தின் உதவியுடன் வெளிநாட்டு உளவு நடவடிக்கைகளுக்கு எதிரான இயக்கத்தை முடுக்கிவிட்டுள்ளது. அந்தத் தளம் தேசியப் பாதுகாப்பு மிரட்டல்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்க பொதுமக்களை ஊக்குவிக்கிறது.

இணையத் தளத்தை தேசியப் பாதுகாப்பு அமைச்சு தொடங்கிவைத்துள்ளது.

அரசாங்க அதிகாரிகள் அல்லது  ராணுவ அதிகாரிகளுக்கு உள்நாட்டினர் அல்லது வெளிநாட்டினர் அதிகாரிகளுக்குக் கையூட்டுக் கொடுக்க, ஆயுதம் ஏந்திய கலவரத்தைத் தூண்டிவிட அல்லது இனப் பிரிவினையைத் தூண்டிவிட மேற்கொள்ளும் முயற்சிகளைத் தன்னிடம் தெரிவிக்கும்படி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

உளவுக் கருவிகளைக் கண்டுபிடிப்போருக்கும் நாட்டின் ரகசியங்களை வாங்குவோர் அல்லது விற்போர் பற்றி தகவல் அளிப்போருக்கும் சன்மானம் வழங்கப்படும் என்று அமைச்சு அறிவித்துள்ளது. 


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்