Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனா: COVID-19 கிருமித்தொற்றால் சுகாதார ஊழியர்கள் 6 பேர் மரணம், 1,716 பேருக்குப் பாதிப்பு

சீனாவில் COVID-19 கிருமித்தொற்று ஏற்பட்டோரைக் கையாண்ட சுகாதார ஊழியர்கள் 6 பேர் மாண்டுவிட்டனர்; மேலும் 1,700 பேர் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சீனா: COVID-19 கிருமித்தொற்றால் சுகாதார ஊழியர்கள் 6 பேர் மரணம், 1,716 பேருக்குப் பாதிப்பு

(படம்: Reuters/P Ravikumar)

சீனாவில் COVID-19 கிருமித்தொற்று ஏற்பட்டோரைக் கையாண்ட சுகாதார ஊழியர்கள் 6 பேர் மாண்டுவிட்டனர்; மேலும் 1,700 பேர் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்களுக்கும், தாதிகளுக்கும் பாதுகாப்புக் கவச உடை போதிய எண்ணிக்கையில் கிடைக்காததால் அவர்கள் சிக்கலை எதிர்நோக்கியதாகக் கூறப்பட்டது.

பாதிக்கப்பட்டோரில் 1,500 பேர் ஹூபெய் மாநிலத்தைச்
சேர்ந்தவர்கள். வூஹான் நகரில் மட்டும் சுமார் 1,100 சுகாதார ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வூஹான் நகரில் கிருமிப் பரவல் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவமனைகளை நாடிவருகின்றனர்.

போதிய சுவாசக் கவசங்களோ, பாதுகாப்புக் கவச உடைகளோ மருத்துவர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை.

உரிய பாதுகாப்பு இன்றியே நோயாளிகளைக் கையாள்வதாக அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, COVID-19 கிருமி பற்றி முதலில் எச்சரித்த மருத்துவர் கடந்த வாரம் கிருமித்தொற்றால் மாண்டார்.

அதைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் மக்கள் சினத்தைப் பதிவிட்டுவருகின்றனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்