Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவின் ஹர்பின் நகரில் பகுதி முடக்கம்

சீனாவின் ஹர்பின் நகரில் பகுதி முடக்கம்

வாசிப்புநேரம் -
சீனாவின் ஹர்பின் நகரில் பகுதி முடக்கம்

படம்: REUTERS/Aly Song

சீனாவின் வடகிழக்கில் உள்ள ஹர்பின் (Harbin) நகரில் "பகுதி முடக்கம்" அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி தொடக்கத்திற்குப் பிறகு அங்கு மீண்டும் உள்ளூர் அளவில் கிருமிப்பரவல் பதிவாகியுள்ளது.

நேற்று (செப்டம்பர் 21) நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்ட 16 பேரில் மூவர் ஹார்பின் நகரைச் சேர்ந்தவர்கள்.

எஞ்சிய 13 பேர் ஃபூஜியான் (Fujian) மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

அத்தியாவசிய காரணங்களுக்காகவே தவிர நகரைவிட்டு வெளியேற வேண்டாம் என்று ஹர்பின் வட்டாரவாசிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்ற உள்ளரங்கு இடங்கள் மூடப்பட்டுள்ளன.

பள்ளிகள் ஒரு வாரத்திற்கு மூடப்படும்.

ஹர்பினில் ஏற்பட்ட கிருமிப்பரவல் சம்பவங்களுக்கும் ஃபூஜியான் வட்டாரத்தில் உள்ள கிருமித்தொற்றுச் சூழலுக்கும் தொடர்பு உள்ளதா என்பது தெரியவில்லை. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்