Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஹாங்காங்கின் பாதுகாப்பை மேம்படுத்தக்கூடிய புதிய சட்ட மசோதாவை நிறைவேற்றச் சீனா திட்டம்

ஹாங்காங்கின் பாதுகாப்பை மேம்படுத்தக்கூடிய புதிய சட்ட மசோதாவை நிறைவேற்றச் சீனா திட்டம்

வாசிப்புநேரம் -
ஹாங்காங்கின் பாதுகாப்பை மேம்படுத்தக்கூடிய புதிய சட்ட மசோதாவை நிறைவேற்றச் சீனா திட்டம்

படம்: AFP

ஹாங்காங்கின் பாதுகாப்பை மேம்படுத்தக்கூடிய புதிய சட்ட மசோதாவை நிறைவேற்றச் சீனா திட்டமிட்டுள்ளது.

ஹாங்காங்கின் சட்டக் கட்டமைப்பையும், அமலாக்க நடைமுறைகளையும் மேம்படுத்துவது அதன் நோக்கம் என்று சீனா கூறியுள்ளது.

சீனாவின் அரசாங்கச் செய்தி நிறுவனமான Xinhua அது குறித்த விவரங்களை வெளியிட்டது.

மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டால், தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்த ஒரு செயலையும் தடுத்து நிறுத்த, ஹாங்காங்கின் தலைமை நிர்வாகிக்கு அதிகாரம் வழங்கப்படும்.

அத்துடன், நாட்டு நிந்தனை, வெளிநாட்டுத் தலையீடு, பயங்கரவாதம் ஆகியவற்றையும் புதிய சட்டம் தடை செய்யும்.

இதன்மூலம், ஹாங்காங் மீதான சீனாவின் பிடி வலுவடையும் ; அது மக்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும், புதிய ஆர்ப்பாட்டங்களைத் தடுக்கும் என்று கவனிப்பாளர்கள் தெரிவித்தனர்.

ஆனால் அத்தகைய சட்டம் அவசியமானது என பெய்ச்சிங் கூறுகிறது.

ஹாங்காங்கில் "ஒரு நாடு இரு ஆட்சிமுறை" கொள்கை பெரும் வெற்றி பெற்றிருப்பதாக மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டப் பேரணி நடத்த முன்வருமாறு, ஹாங்காங் ஜனநாயக ஆர்வலர்கள் இணையம்வழி அழைப்பு விடுத்தனர்.

அதில் கலந்துகொள்ள, ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று காலை முதல் சீனத் தொடர்பு அலுவலகத்துக்கு வெளியே கூடத் தொடங்கினர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்