Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவில் அதிகரிக்கும் கிருமித்தொற்று; ஐந்தே நாள்களில் கட்டப்பட்ட புதிய மருத்துவமனை

சீனாவில், COVID-19 சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, ஹெபெய்(Hebei) மாநிலத்தில் ஐந்தே நாள்களில் புதிய மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சீனாவில், COVID-19 சம்பவங்கள் மீண்டும் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, ஹெபெய்(Hebei) மாநிலத்தில் ஐந்தே நாள்களில் புதிய மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டுள்ளது.

அந்த மருத்துமனை 1,500 அறைகளைக் கொண்டது.

அது, சீனா கட்டுவதற்குத் திட்டமிட்டுள்ள 6 மருத்துவமனைகளில் ஒன்று.

எஞ்சிய 5 மருத்துவமனைகள் அடுத்த வாரத்துக்குள் கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த 6 மருத்துவமனைகள் மொத்தம் 6,500 அறைகளைக் கொண்டிருக்கும்.

சீனா, கிருமித்தொற்றுச் சம்பவங்களைப் பெருமளவு கட்டுப்படுத்தி வந்தது.

ஆனால் இந்த மாதம், நாங்கோங் (Nangong) நகரிலும், ஹெபெய் மாநிலத்திலும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

அண்மையில் நூற்றுக்கணக்கானோர் கிருமித்தொற்றால் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்