Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனா: வனவிலங்குகளை வேட்டையாடினால்...கடும் தண்டனை

சீனாவில், வனவிலங்குகளைச் சட்டவிரோதமாக வேட்டையாடுவோரும் அவற்றின் விற்பனையில் ஈடுபடுவோரும் இனி கடுமையாக தண்டிக்கப்படுவர் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சீனா: வனவிலங்குகளை வேட்டையாடினால்...கடும் தண்டனை

AFP/Sam YEH

சீனாவில், வனவிலங்குகளைச் சட்டவிரோதமாக வேட்டையாடுவோரும் அவற்றின் விற்பனையில் ஈடுபடுவோரும் இனி கடுமையாக தண்டிக்கப்படுவர் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

வூஹான் நகரில் உள்ள ஈரச் சந்தையிலிருந்தே கொரோனா கிருமி பரவத் தொடங்கியதாக நம்பப்படுகிறது.

வௌவால், எறும்புதின்னி போன்ற வன விலங்குகள் அங்கு உணவுக்காக விற்கப்பட்டுவந்தன.

கிருமிப் பரவலைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் அத்தகைய வன விலங்குகளின் விற்பனைக்கு, சீனா தடை விதித்தது.

அந்தத் தடையை நிரந்தரப்படுத்தும் புதிய சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று சீனா உறுதி கூறியது.

வூஹான், ஷாங்ஹாய் ஆகிய பெருநகர நிர்வாகங்கள், வனவிலங்குகளை உட்கொள்வதை ஏற்கனவே தடை செய்துள்ளன.

வேறுசில மாநிலங்கள், வன விலங்குகளை வேட்டையாடுதல், வளர்த்தல், கடத்துதல்-ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்