Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கிருமித்தொற்று மோசமடைவதற்கு வெளிநாட்டுப் பயணிகளும் உறையவைக்கப்பட்ட உணவுப் பொருள் இறக்குமதியும் காரணம்: சீனா

சீனாவின் வடகிழக்குப் பகுதியில் அண்மையில் அதிகரித்துள்ள கிருமிப்பரவல் சம்பவங்களுக்கு நாட்டுக்குள் வரும் பயணிகளும், மாசு கலந்த உறையவைக்கப்பட்ட உணவுப் பொருள் இறக்குமதியும் காரணம் என பெய்ஜ்ஜிங் (Beijing) கூறியுள்ளது.

வாசிப்புநேரம் -
கிருமித்தொற்று மோசமடைவதற்கு வெளிநாட்டுப் பயணிகளும் உறையவைக்கப்பட்ட உணவுப் பொருள் இறக்குமதியும் காரணம்: சீனா

(படம்: REUTERS/Tingshu Wang)

சீனாவின் வடகிழக்குப் பகுதியில் அண்மையில் அதிகரித்துள்ள கிருமிப்பரவல் சம்பவங்களுக்கு நாட்டுக்குள் வரும் பயணிகளும், மாசு கலந்த உறையவைக்கப்பட்ட உணவுப் பொருள் இறக்குமதியும் காரணம் என பெய்ஜ்ஜிங் (Beijing) கூறியுள்ளது.

அந்தக் கிருமி புறநகர்ப் பகுதிகளுக்குப் பரவுவதாக சீன தேசியச் சுகாதார ஆணையத்துக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சொன்னார்.

கிருமிக் கட்டுப்பாட்டு, தடுப்பு நடவடிக்கைகள் எந்த அளவுக்குத் தளர்த்தப்பட்டிருக்கின்றன என்பதை அண்மைக் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் காட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.

உறையவைக்கப்பட்ட உணவுப் பொருள் இறக்குமதி மூலம் COVID-19 கிருமி பரவலாம் எனக் கூறும் ஒரே நாடு, சீனா.

அவ்வாறு கிருமி பரவுவதற்கான சாத்தியம் குறைவே என உலகச் சுகாதார நிறுவனம் கூறிவருகிறது.

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் சீனாவில் பதிவான கிருமித்தொற்றுச் சம்பவங்களைக் காட்டிலும் அண்மை எண்ணிக்கை குறைவு.

ஆனால், அடுத்த மாதம் சீனப் புத்தாண்டுக் காலத்தில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்கலாம் என்ற அக்கறை நிலவுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்