Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

அடுத்தடுத்து செயலிகளைத் தடை செய்ததால் இந்தியா மீது கோபம் கொண்டுள்ள சீனா

சீனாவின் 43 செயலிகளை இந்தியா நேற்று தடை செய்துள்ளது.

வாசிப்புநேரம் -
அடுத்தடுத்து செயலிகளைத் தடை செய்ததால் இந்தியா மீது கோபம் கொண்டுள்ள சீனா

(படம்: AFP)

சீனாவின் 43 செயலிகளை இந்தியா நேற்று தடை செய்துள்ளது.

அதைத்தொடர்ந்து இந்தியா மீது மிகவும் அதிருப்தி அடைந்துள்ளது சீனா.

பாதுகாப்புக் காரணங்களின் அடிப்படையில் சீனாவிற்குச் சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட செயலிகளை அண்மையில் தொடர்ந்து தடை செய்து வருகிறது இந்தியா.

இதுவரை 200-க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் இந்திய-சீன எல்லையில் ராணுவ வீரர்களுக்கு இடையே பூசல் ஏற்பட்டது; அதில் 20 இந்திய வீர்ர்கள் மாண்டனர்.

அப்போதிருந்து இந்திய-சீன உறவில் விரிசல் ஏற்பட்டு வருகிறது.

செயலிகளைத் தடை செய்வது உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளை மீறிய நடவடிக்கை என்று சீனா குறைகூறுகிறது.

செயலிகள் மீதான தடையை இந்தியா நீக்கவேண்டும் என்றும் அது வலியுறுத்தியுள்ளது.

சீன செயலிகளை இந்தியாவில் பல மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர்.

இந்திய அரசாங்கத்தின் தடையால் சீனாவிற்குப் பெரிய அளவில் நட்டம் ஏற்படக்கூடும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்