Images
  • india-china clashes
    படம்: Reuters/Danish Ismail

இந்திய-சீன எல்லைக்கு அருகே சீனாவின் புதிய கட்டட அமைப்புகள்

சீனா, இந்தியாவுக்கும் அதற்கும் இடையிலுள்ள மேற்கு இமாசலப் பிரதேச எல்லைக்கு அருகில் சில கட்டட அமைப்புகளை எழுப்பியுள்ளது.

அது, Maxar Technologies என்ற அமெரிக்க விண்வெளித் தொழில்நுட்ப நிறுவனத்தின் துணைக்கோளம் அளித்த புகைப்படத்தின்மூலம் தெரியவந்தது.

ஜூன் ம15ஆம் தேதி இருத்தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட எல்லை தொடர்பான மோதலுக்கு மறுவாரமே அந்தக் கட்டட அமைப்புகளை கல்வான் பள்ளத்தாக்கு அருகே இருந்த பகுதியில் சீனா எழுப்ப ஆரம்பித்ததைப் படங்கள் காட்டின.

இருதரப்பினருக்கும் இடையே மோதலை நிறுத்தவேண்டும் என்று இந்திய, சீன இராணுவத் தளபதிகள் திங்கள்கிழமையன்று ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தனர்.

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு தெளிவாக இல்லாத இடங்களில் அந்தக் கட்டட அமைப்புகள் எழுப்பப்பட்டதாக இந்தியா குறிப்பிட்டது.
 

Top