Images
  • india, china
    படம்: AFP/Biju Boro

சீனாவுடனான உறவு குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் இன்று முக்கிய உரை

சீனாவுடனான உறவு குறித்து இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றவிருக்கிறார்.

இந்தியாவின் லடாக் எல்லை நிலவரம் குறித்த தகவல்களை அவர் பகிர்ந்து கொள்வார்.

கடந்த சில மாதங்களாக அங்கு இந்திய - சீனப் படையினருக்கு இடையே பதற்றம் நீடிக்கிறது.

அதைத் தணிப்பதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளச், சென்ற வெள்ளிக்கிழமை இருதரப்பும் இணங்கின.

என்றாலும், அங்குள்ள நிலவரத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று அரசாங்க அமைப்புகளை மேற்கோள்காட்டித் தகவல் வெளியாகி உள்ளது.  

Top