Images
  • plasma
    படம்: Wikimedia Commons

சீனா: HIV கிருமிக் கலப்புள்ள 12,000 இரத்த நிண நீர்ப் (plasma) பொட்டலங்கள்

சீனாவில் மருத்துவம் தொடர்பான புதிய மோசடி ஒன்று வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

இரத்தத்திலுள்ள plasma எனப்படும் நிண நீர் அடங்கிய தொகுப்பு ஒன்றில் HIV கிருமிகள் இருக்கக்கூடுமென அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

அவற்றைத் திரும்பப் பெற ஷாங்ஹாய் (Shanghai) அதிகாரிகள் அவசரமாக முயன்று வருகின்றனர்.

HIV கிருமிக் கலப்புள்ள 12,000 இரத்த நிண நீர்ப் பொட்டலங்கள், சீனாவெங்கும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்யப்பட்டதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இரத்தப் புற்றுநோய், கல்லீரல் அழற்சி, வெறிநாய்க் கடிபோன்ற நோய்களால் உருவாகும் நோய் எதிர்ப்புச் சக்தி இழப்பை குணப்படுத்த, இரத்த நிணநீர் அடிக்கடி பயன்படுத்தப்படுவதுண்டு.

பாதிக்கப்பட்ட இரத்த நிண நீர் ஏற்றப்பட்ட நோயாளிகளில் யாருக்கும் இதுவரை HIV கிருமி தொற்றியதாகக் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.  


Top