Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தென்கிழக்காசியாவின் ஆகச் செல்வாக்குமிக்க நாடு சீனா :ISEAS ஆய்வு

தென்கிழக்காசியாவின் ஆகச் செல்வாக்குமிக்க நாடு சீனா என்று அண்மை ஆய்வு கூறுகிறது.

வாசிப்புநேரம் -
தென்கிழக்காசியாவின் ஆகச் செல்வாக்குமிக்க நாடு சீனா :ISEAS ஆய்வு

கோப்புப் படம்: Reuters

தென்கிழக்காசியாவின் ஆகச் செல்வாக்குமிக்க நாடு சீனா என்று அண்மை ஆய்வு கூறுகிறது.

ISEAS கல்விக் கழகம் நடத்திய 'State of Southeast Asia: 2019' என்னும் ஆய்வு முடிவுகள் அவ்வாறு குறிப்பிட்டன.

அமெரிக்கா இந்த வட்டாரத்தில் பொருளியல் , அரசியல் ரீதியாக அதன் செல்வாக்கை இழந்து வருவதை ஆய்வு புலப்படுத்தியது. 

இருப்பினும், உலக அமைதி, பாதுகாப்பு, வளப்பம், நிர்வாகம் ஆகியவற்றுக்கு உகந்ததைச் சீனா செய்யும் என்று ஆய்வில் கலந்துகொண்ட பாதிக்கும் அதிகமானோர் கருதவில்லை.

ஆய்வு கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 5ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. அதில் ஆயிரத்தெட்டுப் பேர் கலந்துகொண்டனர்.

கல்வியாளர்கள், வர்த்தகர்கள், சமூகத் தலைவர்கள், ஊடகத்துறையினர் ஆகியோரிடமிருந்து கருத்துகள் திரட்டப்பட்டன.

வட்டார அரசியல், பொருளியல், சமூகம் ஆகிய விவகாரங்கள் குறித்து நிலவும் போக்கைக் கண்டறிவது ஆய்வின் நோக்கம்.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்