Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வட கொரியா தடை உத்தரவு - அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் கருத்து வேறுபாடு

வட கொரியா மீது விதிக்கப்படும் தடை உத்தரவுகளின் பேரில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் கருத்து வேறுபாடு நிலவியுள்ளது.   

வாசிப்புநேரம் -
வட கொரியா தடை உத்தரவு - அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் கருத்து வேறுபாடு

படம்: REUTERS/David Gray

வட கொரியா மீது விதிக்கப்படும் தடை உத்தரவுகளின் பேரில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் கருத்து வேறுபாடு நிலவியுள்ளது.   இதுநாள் வரை, வட கொரியா மீதான தடை உத்தரவுகளின் பேரில், இரு நாடுகளும் ஒருமித்த எண்ணத்தை வெளிப்படுத்தின.

ஆனால், அண்மையில், வட கொரியாவுடன் வர்த்தகம் புரிய சீன நிறுவனங்கள் மற்றும் சீன கப்பல் நிறுவனங்கள் ஆகியவற்றின் மீது எந்தவித தடை உத்தரவும் பிறப்பிக்கப்படக்கூடாது என்று சீனா கோரிக்கை வைத்துள்ளது.  

கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்கா, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளின், ஐம்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் கப்பல்கள் மீது புதிய தடை உத்தரவுகளை அறிமுகப்படுத்தியது.

அதனை அடுத்து, சீனாவின் கோரிக்கை முன் வைக்கப்பட்டது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்