Images
  • china covid (3)
    (படம்: cnsphoto via REUTERS)

அதிகரிக்கும் கிருமிப்பரவல்;உயர் விழிப்புநிலையில் சீனா

சீனாவின் ஃபுஜியான் (Fujian) மாநிலத்தில் COVID-19 நோய்த்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் அந்நாடு உயர் விழிப்புநிலையில் வைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் புதிதாக 50 பேருக்கு உள்ளூர் அளவில் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

அவர்கள் அனைவரும் புஜியான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

அங்குள்ள புத்தியான் (Putian) நகரில் கிருமித்தொற்று முதலில் தொடங்கியதாக நம்பப்படுகிறது.

அது, சியாமன் (Xiamen) நகருக்கும், மற்ற சில நகரங்களுக்கும் பரவியிருக்கிறது.

சீனாவில் ஒரு வார விடுமுறை தொடங்கிவிருப்பதால், அதிகாரிகள் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த முயல்கின்றனர்.

திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் போன்றவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிகள், வீட்டில் இருந்து கற்கும் நடைமுறைக்கு மாறவிருக்கின்றன.

புஜியான் மாநிலத்தில் பெரிய அளவில் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. 

Top