Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பான், சீனா - இருதரப்பு உறவில் புதிய அத்தியாயம்

சீனாவும் ஜப்பானும், இருதரப்பு உறவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்க உறுதிபூண்டுள்ளன.

வாசிப்புநேரம் -
ஜப்பான், சீனா - இருதரப்பு உறவில் புதிய அத்தியாயம்

படம்: AFP

சீனாவும் ஜப்பானும், இருதரப்பு உறவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்க உறுதிபூண்டுள்ளன.

ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் டாரோ கோனோவும், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும் இணைந்து அணுக்கமாகச் செயல்பட உறுதியளித்தனர். வட கொரிய அணுவாயுத அச்சுறுத்தல் குறித்த சர்ச்சைக்கிடையே, இந்தத் தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்நிலையில், ஜப்பான் முத்தரப்புச் சந்திப்பை ஏற்பாடு செய்ய முனைப்பு காட்டி வருகிறது.  அதில் ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபே, சீனப் பிரதமர் லீ கச்சியாங், தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோர் கலந்து கொள்ள ஜப்பான் விரும்புகிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்