Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

தனது விவகாரங்களில் ஜப்பான் தலையிடுவது குறித்து சீனா எச்சரிக்கை

சீனா தனது உள்துறை விவகாரங்களில் தலையிடுவதாகக் கூறி, ஜப்பானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வாசிப்புநேரம் -

சீனா தனது உள்துறை விவகாரங்களில் தலையிடுவதாகக் கூறி, ஜப்பானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்ஸு மொட்டேகியும் (Toshimitsu Motegi) சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும் (Wang Yi) 90 நிமிடத் தொலைபேசிவழி நேற்று கலந்துரையாடினர்.

சீனாவிற்கு எதிரான கருத்துகள் கொண்டுள்ள நாடுகளை ஆதரிப்பதைத் தவிர்க்குமாறு சீனா ஜப்பானைக் கேட்டுக்கொண்டது.

சீனாவின் கொள்கைகளை ஆக்ககரமான கண்ணோட்டத்துடன் கவனத்தில் எடுத்துக்கொள்ளும்படி அதன் வெளியுறவு அமைச்சர் ஜப்பானைக் கேட்டுக்கொண்டார்.

அந்த அழைப்பின்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் சீனாவுக்கு எதிராக அதன் நட்பு நாடுகளைத் திரட்டுவது குறித்து பெய்ஜிங் குறைகூறியது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பில்
சின் ஜியாங் மீதும் ஹாங்காங் மீதும் அமெரிக்கா விதித்திருக்கும் தடைகளை ஜப்பான் பின்பற்றக்கூடாது என்றும் சீனா எச்சரித்தது.

செங்க்காக்கு தீவுகளில் எல்லை மீறல் நடவடிக்கைகளைச் சீனா நிறுத்தும்படி ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்