Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

‘இந்தியா எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கிறது’ – குறைகூறும் சீனா

இந்திய-சீன எல்லையில் நிலவும் பதற்றநிலைக்கு, எல்லைப் பகுதியில் உள்ளமைப்பில் இந்தியா மேற்கொண்டுவரும் மேம்பாடுகளே காரணம் என பெய்ச்சிங் (Beijing) கூறியிருக்கிறது.

வாசிப்புநேரம் -
‘இந்தியா எல்லையில் பதற்றத்தை அதிகரிக்கிறது’ – குறைகூறும் சீனா

(கோப்புப் படம்: STR/AFP)

இந்திய-சீன எல்லையில் நிலவும் பதற்றத்துக்கு, எல்லைப் பகுதியின் கட்டமைப்பில் இந்தியா மேற்கொண்டுவரும் மேம்பாடுகளே காரணம் என பெய்ச்சிங் (Beijing) கூறியிருக்கிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான ராணுவப் பேச்சு இணக்கம் ஏதுமின்றி முடிந்ததைத் தொடர்ந்து சீனா அவ்வாறு சொன்னது.

இந்தியா புதிததாகக் கட்டியுள்ள பாலங்கள் குறித்து, சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ஜாவ் லி ஜியன் (Zhao Li-jian) கருத்துரைத்தார்.

லடாக் (Ladakh) வட்டாரத்தை சீனா அங்கீகரிக்கவில்லை என்றார் அவர்.

இந்தியா, சட்டவிரோதமாக அந்த வட்டாரத்தை அமைத்திருப்பதாகவும் அவர் கூறினார். பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் இந்தியாவை அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்னாத் சிங் (Rajnath Singh), 44 பாலங்களைத் திறந்து வைத்ததைத் தொடர்ந்து சீனாவின் கருத்து வெளிவந்துள்ளது.

அவற்றில் 7 பாலங்கள், லடாக் வட்டாரத்தில் அமைந்துள்ளன.

துருப்புகளின் நடமாட்டத்துக்கும், ஆயுதங்களை எடுத்துச் செல்வதற்கும் அந்தப் பாலங்கள் உதவும் என்றும் திரு. சிங் கூறியிருந்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்