Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கடல்தளத்தில் இருந்து 9 துணைக்கோள்களை விண்ணில் செலுத்திய சீனா

கடல்தளத்தில் இருந்து 9 துணைக்கோள்களை விண்ணில் செலுத்திய சீனா

வாசிப்புநேரம் -
கடல்தளத்தில் இருந்து 9 துணைக்கோள்களை விண்ணில் செலுத்திய சீனா

படம்: AFP

சீனா அதன் கடல்தளத்தில் இருந்து 9 துணைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.

சீன அரசாங்க ஊடகம் அந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

Long March 11 என்ற உந்துகோளின் துணையோடு மஞ்சள் கடலில் இருந்து இன்று துணைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டன.

Long March 11 உந்துகோள்கள் -கப்பல்கள், தற்காலிகமாக உருவாக்கப்பட்ட தளங்கள் ஆகியவற்றிலிருந்து சிறிய வகை துணைக்கோள்களை அனுப்புவதற்காகத் தயாரிக்கப்பட்டவை.

கடந்த ஆண்டு ஜுன் மாதம் இதேபோன்று உந்துகோளை சீனா விண்ணில் பாய்ச்சியது.

கடல் தளங்களில் இருந்து துணைக்கோள்களை அனுப்புவது பல வகையில் பாதுகாப்பானது என்று சீன அதிகாரிகள் கூறினர்.

சீனா கடந்த சில ஆண்டுகளாக விண்வெளி ஆராய்ச்சியில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது.

2030க்குள் சீனா அமெரிக்காவை முந்தி விண்வெளி ஆராய்ச்சியில் வல்லமையோடு திகழ உழைத்துவருகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்