Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'குறைவான பிறப்பு விகிதத்தால் சீனா நெருக்குதலை எதிர்நோக்கக்கூடும்'

சீனா, குறைவான பிறப்பு விகிதத்தால், எதிர்காலத்தில் நெருக்குதலை எதிர்நோக்கக்கூடும் என அந்நாட்டின் தேசியச் சுகாதார ஆணையத் துணைத் தலைவர் கூறியுள்ளார். 

வாசிப்புநேரம் -

சீனா, குறைவான பிறப்பு விகிதத்தால், எதிர்காலத்தில் நெருக்குதலை எதிர்நோக்கக்கூடும் என அந்நாட்டின் தேசியச் சுகாதார ஆணையத் துணைத் தலைவர் கூறியுள்ளார்.

இவ்வாண்டு முற்பாதியில் பிறப்பு விகிதம் மேலும் குறைந்து வருவதையும் சுட்டினார், துணைத்தலைவர் யு சுவேச்சுன் (Yu Xuejun).

எனவே, மக்கள் மூன்று பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள பெய்ச்சிங் ஊக்குவிக்கிறது. அதற்கு, புதிய சலுகைகளை நேற்று வெளியிட்டது.

3 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளுக்கான செலவுகளுக்கு வரிக்கழிவுகளை வழங்குவது அவற்றுள் ஒன்று.

உலகில் ஆக அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடு சீனா. இருப்பினும், பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்திருப்பது குறித்து அது கவலை தெரிவித்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்