Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனா: மாணவர்களைக் கழிப்பறையில் சாப்பிட வற்புறுத்திய பாலர்பள்ளியால் சர்ச்சை

சீனாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள பாலர்பள்ளி மெதுவாக சாப்பிடும் மாணவர்கள், கழிப்பறையில் சாப்பிடுமாறு புதிய விதியை அறிமுகப்படுத்தியதால், பெற்றோர் சினமடைந்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
சீனா: மாணவர்களைக் கழிப்பறையில் சாப்பிட வற்புறுத்திய பாலர்பள்ளியால் சர்ச்சை

(கோப்புப் படம்: AFP)

சீனாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள பாலர்பள்ளி மெதுவாக சாப்பிடும் மாணவர்கள், கழிப்பறையில் சாப்பிடுமாறு புதிய விதியை அறிமுகப்படுத்தியதால், பெற்றோர் சினமடைந்துள்ளனர்.

South China Morning Post தகவல்படி, ஜிங்ஷி தொங்டி பாலர்பள்ளியில் மெதுவாகச் சாப்பிடும் மாணவர்கள் கழிப்பறையில் தங்கள் உணவை முடிக்கும்படி கூறப்பட்டிருந்தது.

சீக்கிரமாகச் சாப்பிட வேண்டும் என்பதற்காகச் சூடாக இருந்த உணவை விழுங்கியதால் மாணவி ஒருவருக்குத் தொண்டையில் புண் ஏற்பட்டது.

மாணவியின் தாயாருக்குச் சந்தேகம் எழ பள்ளியின் விதிமுறை பற்றி தெரியவந்தது.

பள்ளி முதல்வர் தற்போது பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்