Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

நிலவிலிருந்து பாறை மாதிரிகளைக் கொண்டுவர சீனா விண்கலத்தைச் செலுத்தியது

சீனா, நிலவிலிருந்து பாறை மாதிரிகளைக் கொண்டுவருவதற்காக இயந்திர மனிதக் கருவியுடன் கூடிய விண்கலத்தை வெற்றிகரமாகச் செலுத்தியுள்ளது.

வாசிப்புநேரம் -

சீனா, நிலவிலிருந்து பாறை மாதிரிகளைக் கொண்டுவருவதற்காக இயந்திர மனிதக் கருவியுடன் கூடிய விண்கலத்தை வெற்றிகரமாகச் செலுத்தியுள்ளது.

ஹெய்னன் (Hainan) மாநில உந்துகணைத் தலத்திலிருந்து இன்று அதிகாலை Long March-5 உந்துகணை அந்த விண்கலத்தை ஏந்திப் புறப்பட்டது.

சுமார் 37 நிமிடங்களுக்குப் பிறகு Chang'e-5 விண்கலம் நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்லத் தொடங்கியது.

நிலவின் மேற்பரப்பில் ஏற்கனவே ஆய்வு செய்யப்பட்ட பகுதியிலிருந்து 2 கிலோகிராம் அளவிற்குப் பாறை மாதிரிகளை அது சேகரிக்கும்.

பின்னர் அடுத்த மாதத் தொடக்கத்தில் அதனைப் பூமிக்குக் கொண்டுவருவது திட்டம்.

இதற்கு முன்னர், அமெரிக்காவும், முன்னாள் சோவியத் யூனியனும் அவ்வாறு நிலவிலிருந்து மண்மாதிரிகளை பூமிக்குக் கொண்டுவந்து ஆய்வில் ஈடுபட்டன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்