Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீன-மியன்மார் எல்லையில் மோசமாகும் நோய்ப்பரவல்

சீன-மியன்மார் எல்லையில் மோசமாகும் நோய்ப்பரவல்

வாசிப்புநேரம் -

சீனாவுக்கும் மியன்மாருக்கும் இடையே உள்ள எல்லைப் பகுதியில் நோய்ப்பரவல் மோசமடைந்து வருகிறது.

சீனாவில் புதிதாக 24 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், தென்மேற்கு மாநிலமான யுனானில் உள்ள ருய்லி (Ruili) நகருடன் தொடர்புடையவர்கள்.

கிருமியின் மரபணுப் பகுப்பாய்வின் மூலம், நோய்ப்பரவல் மியன்மாரிலிருந்து பரவியதாகக் கூறப்படுகிறது.

மியன்மார், வியட்நாம், லாவோஸ் ஆகிய நாடுகளிலிருந்து கள்ளக் குடியேறிகள் சீனாவுக்குள் ருய்லி நகர் மூலம் வருவதுண்டு.

அதனால் அந்த வட்டாரக் குடியிருப்பாளர்கள் தற்போது வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவில் வைக்கப்பட்டுள்ளனர்.

அங்கு பெரிய அளவிலான கிருமித்தொற்றுப் பரிசோதனைகளும் தடுப்பூசித் திட்டமும் மேற்கொள்ளப்படுகின்றன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்