Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீன - வட கொரிய எல்லையில் சந்தேகத்துக்குரிய வெடிப்பு - 1.3 ரிக்டர் நிலநடுக்கம்

சீன - வட கொரிய எல்லையில் நிகழ்ந்த சந்தேகத்துக்குரிய வெடிப்பின் காரணமாக அந்த வட்டாரத்தில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

வாசிப்புநேரம் -
சீன - வட கொரிய எல்லையில் சந்தேகத்துக்குரிய வெடிப்பு - 1.3 ரிக்டர் நிலநடுக்கம்

(படம்: Google Maps)

சீன - வட கொரிய எல்லையில் நிகழ்ந்த சந்தேகத்துக்குரிய வெடிப்பின் காரணமாக அந்த வட்டாரத்தில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அது 1.3 ரிக்டராகப் பதிவானது.

ஜீலின் (Jilin) மாநிலத்தின் ஹன்சுன் (Hunchun) நகரில் நேற்று மாலை அந்த அதிர்வு உணரப்பட்டது.

வெடிப்புக்கு என்ன காரணம் என்று உறுதியாகத் தெரியவில்லை. சுரங்கங்களுக்குள் நடத்தப்படும் வெடிப்பு உட்பட பல்வேறு காரணங்களால் அத்தகைய நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கூறினர்.

முன்னர், பியோங்யாங் அணுவெடிச்சோதனை நடத்திய சில வேளைகளில் சீன - வட கொரிய எல்லையைச் சுற்றியுள்ள இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது.

ஆனால், இம்முறை வட கொரியாவின் அணுவெடிச் சோதனைத் தளத்திலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்