Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனாவுடனான எல்லையைத் திறக்கத் தயாராகும் ஹாங்காங்

சீனாவுடனான எல்லையைத் திறக்கத் தயாராகும் ஹாங்காங்

வாசிப்புநேரம் -
சீனாவுடனான எல்லையைத் திறக்கத் தயாராகும் ஹாங்காங்

(படம்: AFP)

ஹாங்காங், தலைநிலச் சீனாவுடன் அதன் எல்லைகளை மீண்டும் திறக்கத் திட்டமிடுகிறது.

நோய்ப்பரவல் காரணமாகச் சுமார் 20 மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

எல்லைகளைத் திறக்க தேவையான நிபந்தனைகளை ஹாங்காங் பூர்த்தி செய்துள்ளதாக அந்நகரின் தலைமைச் செயலாளர் ஜான் லீ (John Lee) கூறினார்.

எல்லைகள் அடுத்த வாரத் தொடக்கத்தில் மீண்டும் திறக்கப்படும் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

இருப்பினும், செயல்பாட்டு விவரங்கள், பயணிகள் எண்ணிக்கை, நிலத் துறைமுக ஏற்பாடுகள் ஆகியன தொடர்பில் அறிக்கைகள் முதலில் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

ஹாங்காங்கிற்கான சுகாதாரக் குறியீட்டுச் செயலியை அறிமுகம் செய்வது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டது.

பயணிகளின் பெயர்கள், அவர்களது COVID-19 நிலவரம் ஆகிய விவரங்கள் அதில் இருக்கும்.

அந்தச் செயலியின் இறுதிக்கட்டச் சோதனைகள் இன்னும் முடிவுறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்