Images
  • south china sea missile (1)
    (படம்: Reuters)

தென் சீனக் கடல் விவகாரம்... சீனா - பிலிப்பீன்ஸ் இடையில் சர்ச்சை வலுக்கிறது

தென் சீனக் கடல் விவகாரத்தில் பெய்ச்சிங்கிற்கும் மணிலாவிற்கும் இடையிலான சர்ச்சை மோசமடையும் நிலையில் உள்ளது.

விட்சுன் பவளப்பாறைக்கு அருகே உள்ள சீனக் கப்பல்கள் குறித்து மிகைப்படுத்துவதை நிறுத்தும்படி பிலிப்பீன்ஸிடம் சீனா கூறியுள்ளது.

அவை கடற்படை கப்பல்கள் என்று பிலிப்பீன்ஸ் குற்றஞ்சாட்டியிருக்கிறது.

எனினும் அவை மீன்பிடிப் படகுகளே என்று சீனா வலியுறுத்திவருகிறது.

ஆயிரக்கணக்கான வருடங்களாகத் தனது மீனவர்கள் அந்தப் பகுதியில் செயல்பட்டு வருவதாகச் சீனா கூறியது.

மணிலா தனது சிறப்புப் பொருளியல் பகுதியில் 200க்கும் மேற்பட்ட சீனக் கப்பல்கள் இருப்பது குறித்துக் கடந்த வாரம் புகார் செய்ததைத் தொடர்ந்து சர்ச்சை மூண்டது.

Top