Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனா: உணவுப் பொருள்களின் விலை ஏற்றத்தால் மக்கள் கவலை

சீனாவில் தற்போது உணவுப் பொருள்களின் விலை ஏற்றத்தால் மக்கள் கவலை கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

வாசிப்புநேரம் -

சீனாவில் தற்போது உணவுப் பொருள்களின் விலை ஏற்றத்தால் மக்கள் கவலை கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விலை ஏற்றத்திற்கு மோசமான வானிலையும் நோய்களும் முக்கியக் காரணங்கள்.

அவற்றால் உணவு தானியங்களின் விளைச்சல் குறைந்து, விலை அதிகரிக்கிறது.

பற்றாக்குறை ஏற்பட்டாலும் மக்களின் தேவைகளுக்கு ஏற்ற உணவுப் பொருள்கள் கிடைப்பதை உறுதிசெய்ய முயன்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பழங்களின் விலை, கடந்த ஆண்டு மே மாதத்தைக் காட்டிலும் இப்போது 27 விழுக்காடு விலை அதிகரித்துள்ளது. அதனால் மக்கள் விலை அதிகமான பழங்கள் வாங்குவதையே தவிர்த்து வருகின்றனர்.

பன்றி இறைச்சியின் விலை 18 விழுக்காடு அதிகரித்துள்ளது.

தற்போது அமெரிக்காவுடன் வர்த்தகப் பூசல் நிலவுவதால், அதுவும் நாளடைவில் சீன உணவுப் பொருள்களின் மீது அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடுமென கவனிப்பாளர்கள் நம்புகின்றனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்