Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

நாகரிகங்களுக்கு இடையே மோதல் இல்லை: சீன அதிபர் சி

சீன அதிபர் சி சின்பிங், நாகரிகங்களுக்கு இடையே மோதல் இல்லை என்று கூறியிருக்கிறார். 

வாசிப்புநேரம் -
நாகரிகங்களுக்கு இடையே மோதல் இல்லை: சீன அதிபர் சி

( கோப்புப் படம் : AFP )

சீன அதிபர் சி சின்பிங், நாகரிகங்களுக்கு இடையே மோதல் இல்லை என்று கூறியிருக்கிறார்.

இன மேலாதிக்கம் என்பது முட்டாள்தனம் என்று அவர் சாடினார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் பூசல் நிலவும் வேளையில் அதிபர் சி அவ்வாறு கூறியுள்ளார்.

உலகில் பெய்ச்சிங்கின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்து அக்கறைகள் எழுந்துள்ளன.

கடந்த மாதம் அமெரிக்க உயரதிகாரி ஒருவர் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போட்டியை வெவ்வேறு நாகரிங்களுக்கும் சித்தாந்தங்களுக்கும் இடையிலான மோதல் என்று வருணித்திருந்தார்.

பாதுகாப்புக் கருத்தரங்கு ஒன்றில் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சின் கொள்கைத் திட்ட இயக்குநர் கிரோன் ஸ்கின்னர், அமெரிக்காவுக்குப் பெரிய போட்டியாக வந்துள்ள முதல் வெள்ளையினமற்ற நாடு சீனா என்று கூறினார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய சீன அதிபர், ஒருவரின் சொந்த இனமும் கலாசாரமும் மேன்மையானவை என்று நினைத்து மற்ற நாகரிகங்களை உருமாற்றவோ முற்றாக அகற்றவோ வலியுறுத்தக்கூடாது என்றார்.

அது முட்டாள்தனமானது, பேரழிவை ஏற்படுத்தக்கூடியது என்று அவர் எச்சரித்தார்.

பெய்ச்சிங்கில் நடைபெறும் ஆசிய நாகரிகங்களின் மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் அதிபர் சி பேசினார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்