Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சீனா: சிச்சுவான் மாநிலத்தில் 6 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கத்தில் 11 பேர் பலி

சீனாவில் தென்மேற்கிலுள்ள சிச்சுவான் மாநிலத்தில் நேர்ந்த நிலநடுக்கத்தில், குறைந்தது 11 பேர் மாண்டதோடு 122 பேர் காயமுற்றனர். 

வாசிப்புநேரம் -
சீனா: சிச்சுவான் மாநிலத்தில் 6 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கத்தில் 11 பேர் பலி

படம்: AP images

சீனாவில் தென்மேற்கிலுள்ள சிச்சுவான் மாநிலத்தில் நேர்ந்த நிலநடுக்கத்தில், குறைந்தது 11 பேர் மாண்டதோடு 122 பேர் காயமுற்றனர்.

6 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம், உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 11 மணியளவில் நேர்ந்தது. 16 கிலோமீட்டர் ஆழத்தில் அது மையங்கொண்டிருந்தது.

நிலநடுக்கம் நேர்ந்த சுமார் முக்கால் மணி நேரத்தில், குறைந்தது 4 முறை, நிலநடுக்கத்துக்குப் பிந்திய அதிர்வுகள் ஏற்பட்டன.

நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த இடத்துக்கு அருகிலிருந்த ஹோட்டல் ஒன்று இடிந்து விழுந்தது.

ஆனால், அதில் ஏற்பட்ட உயிருடற் சேதம்பற்றித் தகவல் இல்லை. அந்த வட்டாரத்திலுள்ள நெடுஞ்சாலைகள் சிலவற்றில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்