Images
  • room-1
    படம்: REUTERS/Jason Lee

சீனா: கோபத்தை வெளிப்படுத்த உதவும் அறை

கோபம் ஏற்பட்டதால், நம்மில் சிலர், கையில் கிடைக்கும் பொருள்களை உடைப்போம். அதுபோன்ற வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது சீனாவில் உள்ள Smash 'சினம் அறை'.


அந்த அறையில் வைக்கப்பட்டுள்ள வீட்டுப் பொருள்களின் மீது வாடிக்கையாளர்கள் தங்களின் ஆவேசத்தை வெளிப்படுத்தலாம்.

பின்னணியில், அவர்களுக்கு விருப்பமான இசை ஒலிக்கப்படும். பாதுகாப்புக் கவசங்கள் அணிந்தவாறு மட்டை, சுத்தியல் ஆகியற்றைப் பயன்படுத்தி பொருள்களை உடைக்கலாம். அரை மணி நேரத்திற்குச் சுமார் 30 வெள்ளி செலுத்த வேண்டும்.


கடந்த செப்டம்பரில், Smash தனது சேவைகளைத் தொடங்கியது. மாதந்தோறும் அங்கு ஏறக்குறைய 15,000 போத்தல்கள் உடைக்கப்படுகின்றன.

வன்முறையை ஊக்குவிப்பது அதன் நோக்கம் அல்ல என்று Smash நிறுவனம் தெரிவித்தது. மாறாகப் பெரிய நகரங்களில் வாழ்வோரின் மன அழுத்தத்தைக் கையாள உதவுவதே அதன் நோக்கம் என்று அது கூறியது.

Top