Images
  • baby
    (படம்: NICOLAS ASFOURI / AFP)

சீனாவின் குழந்தைப் பிறப்பு விகிதம் வரலாறு காணாத அளவு சரிவு

சீனாவின் குழந்தைப் பிறப்பு விகிதம், சென்ற ஆண்டு வரலாறு காணாத அளவு சரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020இல் ஒவ்வொரு 1,000 பேருக்கும் 8.52 குழந்தைகள் பிறந்ததாகச் சென்ற வாரம் வெளியான 2021 புள்ளிவிவரப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

1978ஆம் ஆண்டு அந்தப் புள்ளிவிவரங்களைச் சேகரிக்கத் தொடங்கியதிலிருந்து பதிவாகிய ஆகக் குறைவான விகிதம் அதுவே.

குழந்தைப் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்காக 2016ஆம் ஆண்டு, சீனாவின் 'ஒரே குழந்தை' கொள்கையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.

தம்பதிகள் 2 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அந்த எண்ணிக்கை 3ஆக அதிகரிக்கப்பட்டது.

எனினும், கொள்கை மாற்றங்கள் பயனளிக்கவில்லை.

அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினமும் கருத்தரிப்பு குறித்து அதிகமான பெண்கள் சுயமாக முடிவெடுப்பதும் அதற்குக் காரணங்களாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கையும் 17 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்தது.

8.14 மில்லியன் தம்பதிகள் மட்டுமே 2020இல் திருமணம் செய்துகொண்டனர்.

-AFP 

Top