Images
  • china (4)
    (படம்: Screengrab CCTV/Pear Video)

மத்தியச் சீனாவில் இடிந்து விழுந்த நடைபாதை, அதிர்ச்சிக் காணொளி

சீனாவின் சோங்சிங் நகரச் சாலையோரம் நடைபாதை ஒன்று திடீரென்று இடிந்து விழுந்ததில் இரண்டு பாதசாரிகள் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்தனர்.

கடந்த திங்கட்கிழமை அந்தச் சம்பவம் நடந்தது.

கண்காணிப்புக் கேமராவில் பதிவான அந்தக் காணொளி பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ஷ்டவசமாக அந்த இரண்டு பாதசாரிகளும் உயிர் பிழைத்ததாக CCTV ஒளிபரப்பு நிறுவனம் கூறியது.

சீனாவில் இடைவிடாமல் பெய்யும் பருவமழையால் நடைபாதை நிலைகுலைந்திருக்கலாம் என்று அந்நாட்டின் அரசாங்க ஊடகம் தெரிவித்தது.
   

Top